டெல்லியில் திடீர் மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது


டெல்லியில் திடீர் மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது
x
தினத்தந்தி 23 Sept 2023 2:58 PM IST (Updated: 23 Sept 2023 3:41 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் திடீரென்று மழை பெய்து, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த வாரம் வரை கடுமையான வெப்பநிலை நிலவியது. இதனால், மக்கள் அனல் பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில், இன்று மதியம் திடீரென்று மழை பெய்து உள்ளது. இதனால், ஆர்.கே. புரம், லோக் கல்யாண் மார்க் மற்றும் இந்தியா கேட் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது.

இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இந்தியா கேட் பகுதியருகே கார், ஆட்டோ மற்றும் ஸ்கூட்டர்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடியே சென்ற காட்சியை காண முடிந்தது. மழையால், வானிலை தெளிவற்று காணப்பட்டது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதில், நாக்பூர் நகரில் அம்பஜாரி ஏரி பகுதியில் வீடு ஒன்றில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால், அந்த வீட்டில் இருந்த முதியவர்கள் உள்பட சிலர் வெள்ள நீரில் தத்தளித்தபடி இருந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 6 பேரை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.


Next Story