தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பங்கு சந்தையில் முதலீடு செய்ய கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உப்பள்ளி:
பங்கு சந்தையில் முதலீடு செய்ய கூறி ரூ.2 லட்சம் ேமாசடி செய்யப்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர்
தார்வார் மாவட்டம் உப்பள்ளி நகர் தாஜிபான்பேட்டை அஞ்சட்டகேரி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் ஜெயின் (வயது 21). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும்போது, பங்கு சந்ைதையல் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்.
இதனை நம்பிய யுவராஜ், அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசினார். பின்னர் யுவராஜ், அந்த நபர் மூலம் பங்கு சந்தையில் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்.
ரூ.2 லட்சம் மோசடி
ஆனால் அவருக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் யுவராஜ், தன்னை பங்கு சந்தையில் முதலீடு செய்ய கூறிய நபருக்கு தொடர்புகொண்டார். ஆனால் அவரது செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பங்கு சந்தையில் முதலீடு செய்ய கூறி ரூ.2 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்ததை யுவராஜ் உணர்ந்தார்.
இதுகுறித்து அவர் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்து இருந்தார். ஆனாலும், ரூ.2 லட்சத்தை இழந்ததால் யுவராஜ் மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் உப்பள்ளி உபநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார், யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், பங்கு சந்தையில் முதலீடு செய்யக்கூறி ரூ.2 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்ததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து உப்பள்ளி உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.