"சுகேஷ் சந்திரசேகரை பா.ஜ.க.வின் தேசிய தலைவராக நியமிக்க வேண்டும்" - அரவிந்த் கெஜ்ரிவால்


சுகேஷ் சந்திரசேகரை பா.ஜ.க.வின் தேசிய தலைவராக நியமிக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:25 PM GMT (Updated: 25 Nov 2022 6:50 PM GMT)

பா.ஜ.க.வின் ராகத்திற்கு ஏற்ப சுகேஷ் சந்திரசேகர் நடனமாடுகிறார் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிடுமாறு துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர், பா.ஜ.க.வின் ராகத்திற்கு ஏற்ப சுகேஷ் சந்திரசேகர் நடனமாடுகிறார் எனவும், அவரை பா.ஜ.க.வின் தேசிய தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல், நாட்டில் உள்ள அனைத்து குற்றவாளிகளும், ரவுடிகளும் பாதுகாப்பு தேடி ஒரு கட்சியில் சென்று சேர்கின்றனர் என்று கெஜ்ரிவால் சாடினார். தற்போது சுகேஷ் சந்திரசேகர் தனக்கு பாதுகாப்பு அளிக்கும் கட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


Next Story