கேரள நடிகை கடத்தி துன்புறுத்தப்பட்ட வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்றக்கோரிய மனு - சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி


கேரள நடிகை கடத்தி துன்புறுத்தப்பட்ட வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்றக்கோரிய மனு - சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
x

கேரள நடிகை கடத்தி துன்புறுத்தப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை வேறொரு நீதிபதிக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

கேரளாவில் பிரபல நடிகையை கடத்தி துன்புறுத்தியது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி தன்னிடம் முறையற்ற கேள்விகளை கேட்டதாகவும், இதனால் இவ்வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்றக்கோரியும் நடிகை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்தரப்பினர் வழக்கை திசை திருப்பவும், விசாரணையை தாமதப்படுத்தவும் இது போல் செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டினர். இரு தரப்பின் வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இது போன்ற மனுக்களை பாரபட்சம் என்ற பெயரில் ஏற்றால், நீதிபதிகள் விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

1 More update

Next Story