தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை பேச்சு: உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு எதிரான மனு தள்ளுபடி


தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை பேச்சு: உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு எதிரான மனு தள்ளுபடி
x

கோப்புப்படம்

தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை பேச்சு வழக்கில், உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

ராஜஸ்தான் அல்வரில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யக்கோரி நாவல் கிஷோர் சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இதுபோன்ற மனுக்கள் நாளேடுகளில் முதல் பக்க செய்திகள் இடம்பெறுவதற்கானது என தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story