ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறைக்கு எதிரான மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறைக்கு எதிரான மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புது டெல்லி,

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டதற்கு எதிராக ஸ்ரீ நகரைச் சேர்ந்த ஹாஜி அப்துல் கனி கான் தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

2026-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றம் மற்றும், நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு மத்திய அரசின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டம் 370-வது ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ள விசாரணையை இந்த தீர்ப்பு பாதிக்காது என்றும் தெளிவுபடுத்தியது.


Next Story