ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை 4 வாரங்களில் இடித்து அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு


ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை 4 வாரங்களில் இடித்து அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x

குடிசைகளை அகற்ற அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

புதுடெல்லி,

ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள குடிசைப்பகுதியை 4 வாரங்களுக்குள் இடித்து அகற்றுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல், ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை இடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தீ குளிப்பு போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டதால், குடிசைகளை அப்புறப்படுத்த அக்டோபர் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். குடிசைகளை 4 வாரங்களுக்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபாதிகள், இந்த உத்தரவை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல் உயர் அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரித்தனர்.


Next Story