23 எம்.பி.க்கள் இடைநீக்கம்; நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம்


23 எம்.பி.க்கள் இடைநீக்கம்; நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம்
x

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில், தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக மக்களவை எம்.பி.க்கள் 4 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 19 பேர் என மொத்தம் 23 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனை கண்டித்தும், வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதில் தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு முககவசம் அணிந்து கலந்து கொண்டனர். அந்த முககவசத்தில் 'ஜனநாயக படுகொலை' என்ற வாசகம் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து திருச்சி சிவா, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அதே முககவசம் அணிந்தபடி மாநிலங்களவைக்கும் சென்றனர்.


Next Story