தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு தகராறு; 2 போலீசார் பணி இடைநீக்கம்


தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு தகராறு; 2 போலீசார் பணி இடைநீக்கம்
x

தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு தகராறு செய்த 2 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து சித்ரதுர்கா போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு;

லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு தகராறு

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் போலீஸ் நிலையத்தில் ராகவேந்திரா, திம்மண்ணா ஆகிய 2 பேர் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு

பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது சாலையோரம் தமிழகத்தை சேர்ந்த லாரி நின்றுள்ளது. அந்த லாரியின் டிரைவர், கிளீனர் லாரியில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

இதைதொடர்ந்து 2 போலீசாரும் சென்று லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் டிரைவர் லஞ்சம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 போலீசாரும், லாரி டிரைவரிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனை கிளீனர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

பணி இடைநீக்கம்

இதுபற்றி சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் கவனத்திற்கும் வந்தது. இதையடுத்து அவர், போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். அதில் போலீஸ்காரர்களான ராகவேந்திரா, திம்மண்ணா ஆகிய 2 பேரும் தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு தகராறு செய்தது உறுதியானது.

இதையடுத்து 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் உத்தர

விட்டார்.


Next Story