பள்ளியில் லிப்டில் சிக்கி ஆசிரியை பலி


பள்ளியில் லிப்டில் சிக்கி ஆசிரியை பலி
x

பள்ளியில் லிப்டில் சிக்கி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை நகரின் மலட் மேற்கு பகுதியில் தனியார் ஆங்கில பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜெனியல் பெர்னாண்டஸ் (வயது 26) என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பள்ளியில் 6-வது மாடியில் ஆசிரியை ஜெனியல் நேற்று மதியம் 1 மணிக்கு வகுப்பை முடித்துவிட்டு லிப்டில் 2-வது மாடியில் உள்ள பணியாளர்கள் அறைக்கு சென்றுள்ளார்.

6-வது மாடியில் லிப்டிற்குள் ஜெனியல் நுழைந்துள்ளார். அப்போது, திடீரென லிப்ட் மேலே சென்றுள்ளது. ஆசிரியை ஜெனியல் லிப்டிற்கும், 6-வது மாடிக்கும் இடையே சிக்கிக்கொண்டார். அப்போது, லிப்ட் வேகமாக மேலே சென்றதில் லிப்டிற்கும், சுவருக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதில், ஆசிரியை ஜெனியல் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஜெனியலை மீட்ட சக ஆசிரியைகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், ஜெனியலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story