கர்நாடகாவில் பேருந்து விபத்து; தெலுங்கானாவை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு


கர்நாடகாவில் பேருந்து விபத்து; தெலுங்கானாவை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு
x

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கோவாவில் இருந்து ஐதராபாத்தை நோக்கி 29 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் உள்ள கமலாபுரா அருகே இன்று அதிகாலை பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இதில், பேருந்து தீ பிடித்து மளமளவென பரவியது. பயணிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலத்த காயங்களுடன் பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றனர். இந்த விபத்தில் 22 பேர் பேருந்தில் இருந்து தப்பியதாகவும், 7 பேர் பலியாகினர். சரக்கு வாகன ஓட்டுனரும் பலத்த காயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கலபுர்கியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story