தெலுங்கானா சட்டசபை தேர்தல்: ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்


தெலுங்கானா சட்டசபை தேர்தல்:  ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 Nov 2023 2:56 AM GMT (Updated: 30 Nov 2023 5:12 AM GMT)

தெலுங்கானாவின் என்னுடைய சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் சாதனை அளவாக வாக்கு பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதுதவிர, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியை சந்திக்கின்றன.

இதில், நக்சலைட்டுகள் பாதிப்பு காணப்படும் 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ந்தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதள பதிவில், தெலுங்கானாவின் என்னுடைய சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் சாதனை அளவாக வாக்கு பதிவு செய்து, ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்.

குறிப்பிடும்படியாக, இளம் மற்றும் முதல்முறை வாக்கு செலுத்துபவர்கள் அவர்களுடைய வாக்குகளை செலுத்தும்படி வேண்டி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.


Next Story