மனைவி தற்கொலை செய்து கொண்ட சில மணிநேரத்தில் துப்பாக்கியால் சுட்டு கணவனும் தற்கொலை - தெலுங்கானாவில் சோகம்


மனைவி தற்கொலை செய்து கொண்ட சில மணிநேரத்தில் துப்பாக்கியால் சுட்டு கணவனும் தற்கொலை - தெலுங்கானாவில் சோகம்
x

தெலுங்கானாவில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சில மணிநேரத்தில் துப்பாக்கியால் சுட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் உள்ள ஜங்கான் காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீனிவாஸ். அவரது மனைவி ஸ்வரூபா. இன்று காலையில் குளிக்கச் சென்ற ஸ்வரூபா பாத்ரூமில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் சில மணி நேரத்தில் ஸ்ரீனிவாசும் தன்னுடைய சர்வீஸ் ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த தம்பதிக்கு பணப்பிரச்சனை இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story