மேற்கு வங்காளம் இடைத்தேர்தலில் பரபரப்பு - பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோதல்


மேற்கு வங்காளம் இடைத்தேர்தலில் பரபரப்பு - பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோதல்
x

மேற்கு வங்காளம் மாநிலம் அசன்சோல் பகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் வெடித்தது.

அசன்சோல்,

மேற்கு வங்காளம் மாநிலம் அசன்சோல் பகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் வெடித்தது.

அசன்சோல் நகராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடிக்குள் பாஜக ஆதரவாளர்களும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர். வாக்காளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் திசை திருப்ப முயற்சிப்பதாகவும் தங்களை தாக்கியதாகவும் பாஜக எம்.எல்.ஏ லட்சுமன் குற்றம் சாட்டியுள்ளார்.

இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் சிலரை கைது செய்தனர்.

1 More update

Next Story