கேரளா எல்லையில் பயங்கர சோதனை - தமிழக உணவு பொருட்கள் தரம் குறைவு என புகார்


கேரளா எல்லையில் பயங்கர சோதனை - தமிழக உணவு பொருட்கள் தரம் குறைவு என புகார்
x

தமிழ்நாட்டிலிருந்து செல்லும் உணவு பொருட்களை, எல்லை பகுதியிலேயே கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு செல்லும் உணவு பொருட்களை, எல்லை பகுதியிலேயே கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் பாலில், அமிலம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தரம் குறைந்த உணவுகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்படும் பால், இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை, கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லையில் வைத்தே தீவிர சோதனை செய்து, தங்கள் மாநிலத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.


Next Story