பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்


பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது என மத்திய மந்திர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்தவர்கள் மூலமாக இங்கு பயங்கரவாதம் தொடங்கிவிட்டது. மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த தாக்குதலின்போது பயங்கரவாதத்தின் உண்மையான தாக்கத்தை மக்கள் கண்டனர். அதுவரை பலர் தெளிவு இல்லாமல் இருந்தனர்.

இப்போது, நாம் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான நமது கவலைகளை நாம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் இணைந்திருக்க முடியாது."

இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.


Next Story