காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு - ஆயுதங்கள், வெடிபொருட்கள் சிக்கின
ராணுவமும், போலீசாரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜம்மு,
காஷ்மீரில் ரம்பன் மாவட்டம் டெதார்கா வனப்பகுதியில் ராணுவமும், போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு கையெறி குண்டு லாஞ்சர், சீன கைத்துப்பாக்கி, 36 தோட்டாக்கள், 4 ஏ.கே. 47 ரக தோட்டாக்கள், கத்தி, பைனாகுலர், கேமரா, ஒயர்லெஸ் செட் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story