மின் திருட்டு புகார்: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீது வழக்கு


மின் திருட்டு புகார்: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Nov 2023 9:58 PM IST (Updated: 15 Nov 2023 3:55 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி வீடு மின் அலங்காரத்தால் ஜொலிக்கப்பட்டு இருந்தது.

பெங்களூரு,

தீபாவளியையொட்டி தனது இல்லத்திற்கு மின் அலங்காரம் செய்ய மின் திருட்டில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி வீடு பெங்களூருவில் உள்ளது. இங்கு தீபாவளி பண்டிகையையொட்டி வீடு மின்சார வெளிச்சத்தில் ஜொலிக்கும்படி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வீட்டின் அருகில் டிரான்ஸ்பார்ம் இருந்தது. இதிலிருந்து மின்சாரத்தை திருடியாக காங். பிரமுகர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.

இதையடுத்து பெங்களூரு மின் விநியோக நிறுவனம் போலீசில் புகார் கூறியது.போலீசார் குமாரசாமி மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தனக்கு தெரியாமல் இது நடந்துவிட்டதாகவும் மன்னிப்பு கோருவதாக குமாரசாமி தெரிவித்தார்.

1 More update

Next Story