சிறுமியை 5 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து பலாத்காரம்; தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு


சிறுமியை 5 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து பலாத்காரம்; தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு
x

தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் கும்பம் சிவகுமார் ரெட்டி, சிறுமியை 5 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து பலாத்காரம் செய்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் கும்பம் சிவகுமார் ரெட்டி. இவர் சிறுமி ஒருவரை 5 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுபற்றி கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள கப்பன் பார்க் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவர் மீது கடந்த காலங்களிலும் பலாத்கார புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு நாராயணபேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவராக அவர் பதவி வகித்தபோது, பெண் ஒருவரை அணுகி அவரிடம், திருமணம் செய்கிறேன் என உறுதி அளித்து உள்ளார்.

அதற்கு அந்த பெண், அவருக்கு மனைவி இருப்பது பற்றி கேட்டுள்ளார். அதற்கு சிவகுமார், அவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்றும் 3 ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார் என்றும் கூறியுள்ளார்.

இதனால், அவரை கவனித்து கொள்ள ஒரு பெண் தேவை என கூறியுள்ளார். அதன்பின்னர், அந்த பெண்ணை திருமணமும் செய்துள்ளார்.

இதன் பின்னர் அவரை பஞ்சகுட்டா பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்து, வீடியோவாக அதனை பதிவு செய்து வைத்து கொண்டார். அதனை வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டலும் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து மோசடிக்குள்ளான அந்த பெண் பஞ்சகுட்டா போலீசில் புகாரளித்து உள்ளார். இதுபற்றியும் ஒருபுறம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story