அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது; கெஜ்ரிவால் பேச்சு


அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது; கெஜ்ரிவால் பேச்சு
x

இமாசல பிரதேசத்தில் பொது கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால் அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது என கூறியுள்ளார்.



ஹமீர்பூர்,



இமாசல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், ஹமீர்பூர் நகரில் இன்று நடந்த பொது கூட்டமொன்றில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, இமாசல பிரதேசத்தில் 14 லட்சம் மாணவ மாணவியர் பள்ளி கூடங்களுக்கு செல்கின்றனர். அவர்களில் 8.5 லட்சம் பேர் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். 5.5 லட்சம் பேர் தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது என கூறியுள்ளார்.

இந்த 8.5 லட்சம் மாணவர்களின் வருங்காலம் தொடர்ந்து இருண்ட நிலையில் உள்ளது. 2 ஆயிரம் பள்ளி கூடங்களில் ஒரே ஒரு ஆசிரியரே உள்ளார். 722 பள்ளிகள் ஒரே ஒரு அறையை மட்டுமே கொண்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.


Next Story