கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு காரணம் பா.ஜனதா - மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி


கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு காரணம் பா.ஜனதா - மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 8:13 AM GMT)

கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

சிக்கமகளூரு-

கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

வளர்ச்சி பணிகள்

சிக்கமகளூரு மாவட்டத்திற்கு பொறுப்பு மந்திரியாக கே.ஜே.ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்ட அவர் முதல் முறையாக சிக்கமகளூருவுக்கு நேற்று வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் விரைவில் முடிக்கப்படும். மேலும் புதிதாக வளர்ச்சி திட்டங்கள் மாவட்டத்தில் கொண்டு வரப்படும். கர்நாடகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு காரணம் பா.ஜனதா தான். அவர்கள் கொண்டு வந்த கட்டண உயர்வை தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மின் கட்டண உயர்வை காங்கிரஸ் அரசு மீது பா.ஜனதாவினர் பழி போடுகின்றனர். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கான தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதுபோல், ரேஷன் அட்டை தாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும்.

இலவச அரிசி

அதற்காக வெளி மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசிடம் கேட்டால் அவர்கள் அரிசி கொடுப்பதற்கு முன்வருவதில்லை. மாநில அரசு மத்திய அரசிடம் இலவசமாக அரிசி கேட்கவில்லை. மக்களுக்கு நலத்திட்டங்களை காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. சிக்கமகளுருவில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை கால்வாய் பணிகள், அம்ருத்த கங்கா குடிதண்ணீர் திட்டம் உள்பட நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்படும். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கான முன்ஏற்பாடுகளை அனைத்து அரசு அதிகாரிகளும் செய்ய கொள்ள வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுசம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஆய்வு செய்ய உள்ளேன். அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் தம்மய்யா, சீனிவாஸ், எம்.எல்.சி. காயத்ரி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்சுமணந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story