ராமர் பாலத்தை புராதன சின்னமாக்க கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


ராமர் பாலத்தை புராதன சின்னமாக்க கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x

கோப்புப்படம்

ராமர் பாலத்தை புராதன சின்னமாக்க கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவின் ராமேசுவரத்துக்கும், இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் இடையே ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் லக்னோவை சேர்ந்த இந்து தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் அசோக் பாண்டே சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது மனுதாரர் அசோக் பாண்டே ஆஜராகி, 'ராமர் பாலத்தை தரிசிக்கும் வகையில் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சுவர் கட்டுமானத்தை எழுப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், 'கடலில் சுவர் கட்டுமானத்தை எழுப்ப எப்படி அரசுக்கு உத்தரவிட முடியும்?, இதையெல்லாம் கோர்ட்டு செய்ய வேண்டுமா?, இது அரசு நிர்வாகம் சார்ந்த விவகாரம்' என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story