நீதித்துறை, விசாரணை அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன - ராகுல்காந்தி


நீதித்துறை, விசாரணை அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன - ராகுல்காந்தி
x

நீதித்துறை, விசாரணை அமைப்புகள், ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி துவங்கிய இந்த பாதயாத்திரை தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பல்வேறு அமைப்புகள் மீது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நீதித்துறை, விசாரணை அமைப்புகள், ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது இந்த அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இந்த அமைப்புகளின் சுதந்திரம் காக்கப்படும்' என்றார்.


Next Story