மனைவியுடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரி மேல்முறையீடு: மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்
மனைவியுடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரி செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
மனைவியுடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரி ஹார்மனி, ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்துவருகிறது.
பாலியல் சுரண்டலுக்கு ஆளான குழந்தை தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, மனைவியுடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரிய மேல்முறையீட்டு மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story