புலி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி


புலி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி
x

குண்டலுபேட்டை அருகே புலி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதியடைந்துள்ள நிலையில், கூண்டு வைத்து பிடிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

கொள்ளேகால்:

குண்டலுபேட்டை அருகே புலி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதியடைந்துள்ள நிலையில், கூண்டு வைத்து பிடிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

புலி நடமாட்டம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா குருபர ஹண்டி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி புலி, சிறுத்தை, காட்டுயானைகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த புலிகள் நடமாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வன விலங்குகளின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று முன்தினம் விவசாயிகள் சிலர், நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது புலி ஒன்று வனப்பகுதியில் இருந்து விளை நிலத்திற்கு வந்துள்ளது. இதை பார்த்த விவசாயிகள் பீதியடைந்ததுடன், சத்தம் மிட்டனர்.

கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

இந்நிலையில் பொதுமக்களை பார்த்த புலி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது விவசாயிகள், கடந்த சில வாரங்களாக சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதாக கூறி, செல்போனில் எடுத்த வீடியோவை காண்பித்தனர். மேலும் இந்த சிறுத்தை நடமாட்டத்தை தடுப்பதுடன், அதை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


Next Story