வயநாட்டில் கால்நடைகளை வேட்டையாடிய புலி ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின் சிக்கியது


வயநாட்டில் கால்நடைகளை வேட்டையாடிய புலி ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின் சிக்கியது
x

image courtesy: ANI

தினத்தந்தி 28 Oct 2022 1:36 PM GMT (Updated: 28 Oct 2022 1:37 PM GMT)

கேரள மாநிலம் வயநாட்டில் கால்நடைகளை வேட்டையாடிய புலி ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின் சிக்கியது.

வயநாடு,

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சீரல் கிராமத்தில் சுற்றித்திரிந்த புலி சிக்கியதையடுத்து அங்கு நிலவிய அச்சம் முடிவுக்கு வந்தது.

கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை 10 வயதான புலி ஒன்று வேட்டையாடியுள்ளது. இதையடுத்து புலியைத் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான வனக் காவலர்கள், சிறப்பு விரைவு நடவடிக்கைக் குழு மற்றும் பயிற்சி பெற்ற யானைகள் ஈடுபட்டன.

மேலும் இந்த புலியைக் கண்காணிக்க கிராமத்தைச் சுற்றி 30 கேமராக்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் அந்த புலி இன்று காலையில் கிராமத்தில் சுற்றித்திரிந்த போது சிக்கியது.

பிடிபட்ட புலி பத்தேரிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் வயநாடு வனவிலங்கு சரணாலயம் பச்சடியில் உள்ள நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story