திருப்பதியில் நவம்பர் மாதம் உண்டியல் காணிக்கை ரூ.108.46 கோடி வசூல் - தேவஸ்தானம் தகவல்


திருப்பதியில் நவம்பர் மாதம் உண்டியல் காணிக்கை ரூ.108.46 கோடி வசூல் - தேவஸ்தானம் தகவல்
x

திருப்பதியில் கடந்த மாதம் 97.47 லட்சம் லட்டுக்களை பக்தர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த நவம்பர் மாதம் 19 லட்சத்து 73 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் திருப்பதியில் கடந்த மாதம் 108 கோடியே 46 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பக்தர்கள் வாங்கிச் சென்ற லட்டுக்களின் எண்ணிக்கை 97 லட்சத்து 47 ஆயிரம் எனவும், கடந்த மாதம் 7 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story