"அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா" - கேரள அரசு உத்தரவு


அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா - கேரள அரசு உத்தரவு
x

பள்ளி சுற்றுலாக்களுக்கு சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பள்ளிகளில் இருந்து சுற்றுலா செல்ல அம்மாநில பள்ளிக்கல்வித்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணத்தின் விவரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் போக்குவரத்துறையின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேரள மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story