குஜராத்தில் விஷ சாராயம் குடித்து 7 பேர் பலி
குஜராத்தில் விஷ சாராயம் குடித்து 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆமதாபாத்,
குஜராத்தின் போடாட் மாவட்டத்துக்கு உட்பட்ட ரோஜிட் கிராமத்தில் விற்கப்பட்ட சாராயத்தை நேற்று முன்தினம் இரவு 15-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்தனர். அதில் விஷத்தன்மை கலந்திருந்ததாக தெரிகிறது.
இதனால் அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி சரிந்தனர். அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் நேற்று மாலை வரை 7 பேர் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். மேலும் 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த விஷசாராயத்தை விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story