உத்தர பிரதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த டிராக்டர்; 22 பேர் பலியான சோகம்


உத்தர பிரதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த டிராக்டர்; 22 பேர் பலியான சோகம்
x

உத்தர பிரதேசத்தில் பலரை ஏற்றி கொண்டு சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகி உள்ளனர்.

ஷாஜகான்பூர்,

உத்தர பிரதேசத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் பீர்சிங் கிராமம் அருகே தில்ஹார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பின் பக்கத்தில் டிராலியில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்து உள்ளனர்.

இந்த நிலையில், டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஓடியுள்ளது. பின்னர் தடுப்பு சுவரில் மோதி, கர்ரா ஆற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்து உள்ளது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக விரைந்துள்ளனர். பலர் படுகாயமடைந்த சூழலில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. முதல்-மந்திரி ஆதித்யநாத், ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளார்.

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்கும்படியும், காயம்பட்ட நபர்களுக்கு முறையான மருத்துவ உதவிகளை அதிகாரிகள் உறுதி செய்யும்படியும் உத்தரவிட்டு உள்ளார்.

1 More update

Next Story