கத்தியை வைத்து நடுரோட்டில் சண்டை போட்ட வியாபாரிகள்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்


கத்தியை வைத்து நடுரோட்டில் சண்டை போட்ட வியாபாரிகள்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
x

கேரளாவில் காய்கறி வியாபாரிகள் நடுரோட்டில் கத்தியை வைத்து மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியில் சாலையோரமாக பத்துக்கும் மேற்பட்டோர், காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி காரணமாக, இரு தரப்பினரிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில், திடீரென காய்கறி வியாபாரிகளுக்கிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வாய் தகராறில் தொடங்கிய சண்டை முற்றி, இரு தரப்பினரும் கத்தியை வைத்து மோதி கொண்டனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story