மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை
புதுடெல்லி:
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) இன்று கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது.
காந்தி ஜெயந்தி அன்று புது தில்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ் காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story