பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின் ராகுல்காந்தியின் 'புது லுக்' - லண்டன் கெம்பிரிஜ் பல்கலை.யில் விரிவுரை...!
ராகுல்காந்தி லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற இந்த பாத யாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாத யாத்திரையின் போது ராகுல்காந்தி தனது தலைமுடியை வெட்டாமலும், தாடியை ஷேவ் செய்யாமலும் நடைபயணம் மேற்கொண்டிருந்தார்.
இதனிடையே, பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம், காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திலும் ராகுல்காந்தி தாடியை ஷேவ் செய்யாமல் யாத்திரையின் போது இருந்த தோற்றத்திலேயே இருந்தார்.
இந்நிலையில், ராகுல்காந்தி தற்போது புது லுக்கி இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது மிகவும் வயதான தோற்றத்தில் தாடி, நரைமுடியுடன் இருந்த ராகுல்காந்தி தற்போது புது லுக்கிற்கு மாறியுள்ளார்.
தான் படித்த பல்கலைக்கழகமான இங்கிலாந்து தலைநகர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி நாளை விரிவுரையாற்றுகிறார். இதற்காக அவர் லண்ட்ன் சென்றுள்ளார். 21-ம் நுற்றாண்டை கேட்க கற்றுக்கொள்ளுங்கள் என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார்.
அதன்பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்து வாழ் இந்தியர்கள், தொழிலதிபர்களை ராகுல்காந்தி சந்திக்க உள்ளர்.