திரிபுரா முதல் மந்திரி மாணிக் சாஹாவுக்கு கொரோனா தொற்று


திரிபுரா முதல் மந்திரி மாணிக் சாஹாவுக்கு கொரோனா தொற்று
x

கோப்புப்படம் 

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திரிபுரா,

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரிபுரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 365 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மாணிக் சாஹா தனது டுவிட்டர் பக்கத்தில்,

"எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் முற்றிலும் ஆரோக்கியமாகவும், எந்த அறிகுறிகளும் இல்லாமல் நன்றாகவும் இருக்கிறேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story