திரிபுராவின் பிரதான எதிர்கட்சி பா.ஜ.க.வுடன் இணைய முடிவு


திரிபுராவின் பிரதான எதிர்கட்சி பா.ஜ.க.வுடன் இணைய முடிவு
x

Image Courtesy : PTI

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசுடன் திப்ரா மோதா கட்சி இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகர்தலா,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திரிபுரா மாநிலத்தில், பிரத்யோத் தேப் பர்மா தலைமையிலான பிரதான எதிர்கட்சி திப்ரா மோதா, அந்த மாநிலத்தின் ஆளும் பா.ஜ.க. - ஐ.பி.எப்.டி. கூட்டணி அரசுடன் இணைய முடிவு செய்துள்ளதாக திரிபுரா மாநில பா.ஜ.க. தலைவர் ரஜிப் பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார்.

மொத்தம் 60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டமன்றத்தில், திப்ரா மோதா கட்சிக்கு 13 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். திரிபுரா மாநிலத்தில் நீண்ட காலமாக நீடித்து வரும் பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அண்மையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு மற்றும் திரிபுரா அரசுடன், திப்ரா மோதா கட்சி ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story