பீகாரில் லாரி-ஆட்டோ மோதி விபத்து: 5 பேர் பலி


பீகாரில் லாரி-ஆட்டோ மோதி விபத்து: 5 பேர் பலி
x

உயிரிழந்தவர்களில் ஆட்டோ டிரைவரை தவிர அனைவரும் பெண்கள் ஆவர்.

பாட்னா,

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஆட்டோ டிரைவரை தவிர அனைவரும் பெண்கள் ஆவர். ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர் உட்பட அனைவரும் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மோதிபூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விபத்துக்கு பின் லாரி ஓட்டுநர், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார்.

இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல் மந்திரி, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.


Next Story