மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் சாவு


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 7 Dec 2022 6:45 PM GMT (Updated: 2022-12-08T00:17:14+05:30)

பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

காமாட்சிபாளையா:

குடகு மாவட்டம் மடிகேரியை சேர்ந்தவர் ஹமீத் (வயது 24). இவர், பெங்களூருவில் வசித்து வந்தார். இவருடைய நண்பர் கேரளாவை சேர்ந்த சமிவுல்லா கக் (25). இவர்கள் 2 பேரும் நகரில் உள்ள ஒரு செருப்பு கடையில் வேலை பார்த்து வந்தார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் வேலை முடிந்ததும் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். காமாட்சி பாளையா லிங் ரோட்டில் ஹமீத், சமிவுல்லா கக் சென்று கொண்டு இருந்தனர். அப்போது மைசூரு ரோடுவை நோக்கி சென்ற ஒரு லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.

லாரி மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஹமீத், சமிவுல்லா கக் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காமாட்சிபாளையா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.


Next Story