ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும்


ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும்
x

கே.ஜி.எப். பட இசையை பயன்படுத்திய வழக்கில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்று பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கே.ஜி.எப். பட இசையை பயன்படுத்திய வழக்கில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்று பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஒற்றுமை பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய அந்த யாத்திரை கேரளா, கர்நாடகம் வழியாக தெலுங்கானாவுக்கு சென்றது. தற்போது அந்த பாதயாத்திரை தெலுங்கானாவில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் கணக்கு மற்றும் ஒற்றுமை யாத்திரை கணக்கில் யாத்திரைக்கு கே.ஜி.எப்.-2 பட பாடலின் இசையை பயன்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து எம்.ஆர்.டி. இசை நிறுவனம், தங்களின் முன் அனுமதி பெறாமல் காங்கிரஸ் கட்சி கே.ஜி.எப்.-2 பட பாடல் இசையை பயன்படுத்தியதாகவும், அதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் கூறியது.

டுவிட்டர் கணக்கு

அதன் அடிப்படையில் பெங்களூரு யஷ்வந்தபுரம் போலீசார் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு வணிக கோர்ட்டு, காங்கிரஸ் மற்றும் ஒற்றுமை பாதயாத்திரை டுவிட்டர் கணக்கை முடக்கும்படி அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட உள்ளன. இந்த வழக்கு காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story