ஒடிசாவில் கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி 2 பேர் பலி; 25 பேர் படுகாயம்!


ஒடிசாவில் கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி 2 பேர் பலி; 25 பேர் படுகாயம்!
x

ஒடிசாவில் கால்பந்து விளையாட்டின்போது திடலில் மின்னல் தாக்கியதில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

ரூர்கேலா,

ஒடிசாவில் கால்பந்து விளையாட்டின்போது திடலில் மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர்.

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் பனீலாட்டா பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்றது. அப்போது இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

மின்னல் தொடங்கியதும், வீரர்கள் பாதுகாப்பான இடங்களை தேடி பதுங்குவதற்கு விரைந்தனர். ஆனால் விளையாட்டு மைதானத்தில் சட்டென மின்னல் தாக்கியதில், 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வீரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதில் மொத்தம் இரண்டு கால்பந்து வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 21 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ரூர்கேலா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

1 More update

Next Story