அசாமில் ரூ.18 கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது


அசாமில் ரூ.18 கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது
x

கோப்புப்படம்

அசாமில், காரில் ரூ.18 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் சென்ற 2 பேரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச்சென்று பிடித்து கைது செய்தனர்.

கவுகாத்தி,

மணிப்பூரை சேர்ந்த ஒரு குழு, அசாம் வழியாக போதைப்பொருள் கடத்தப் போவதாக அசாம் போலீசின் சிறப்பு அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நேற்று காலை, அசாமின் காம்ருப் மாவட்டம் வழியாக சொகுசு காரில் அந்த குழு போதைப்பொருளை கடத்தி வருவதாக புதிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காம்ருப் போலீசாருடன் சிறப்பு அதிரடிப்படையினரும் காம்ருப் மாவட்டத்தில் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, நவீன தொழில்நுட்பம் மூலம் கார் வரும் இடத்தை போலீசார் கண்டறிந்தனர். அந்த காரை போலீசாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் சினிமா பாணியில் துரத்திச் சென்றனர். காரில் இருந்தவர்கள், போலீஸ் பிடியில் இருந்து தப்ப வேகமாக சென்றனர்.

2 பேர் கைது

இந்த களேபரத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, ஒரு பள்ளத்தில் விழுந்தது. போலீசார் அந்த இடத்தை அடைந்து காரில் சோதனை நடத்தினர்.

அதில் உள்ளே 100 சோப்பு பெட்டிகள் இருந்தன. அவற்றில் மொத்தம் 1.3 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

ரூ.18 கோடி

அவர்கள் அளித்த தகவலின்பேரில், கவுகாத்தி நகரில் ஒரு வாடகை வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 65 பாக்கெட்டுகளில் மொத்தம் 900 கிராம் எடையுள்ள ஹெராயின் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 இடங்களிலும் சிக்கிய போதைப்பொருட்களின் ெமாத்த மதிப்பு சுமார் ரூ.18 கோடி ஆகும்.

போதைப்பொருள் கும்பலை பிடித்த அசாம் போலீசாருக்கு அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.


Next Story