காஷ்மீரில் போலீஸ் நிலையம் அருகே 2 வெடிகுண்டுகள் சிக்கின

காஷ்மீரில் போலீஸ் நிலையம் அருகே 2 வெடிகுண்டுகள் சிக்கின
x

காஷ்மீரில் ஜம்மு அருகே சத்வாரி பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. அதன் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கருப்பு நிற பை கிடந்தது.

ஜம்மு,

காஷ்மீரில் ஜம்மு அருகே சத்வாரி பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. அதன் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கருப்பு நிற பை கிடந்தது.

சந்தேகத்தின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பையை ஆய்வு செய்தபோது உள்ளே 2 வெடிகுண்டுகள் இருந்தன. ஒவ்வொன்றும் 500 கிராம் எடையில் இருந்தன.

அவற்றை அங்கிருந்து எடுத்துச்சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இதனால், பெரும் நாசவேலை தவிர்க்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் அந்த பை போடப்பட்டு இருக்கலாம் என்பதை போலீசார் மறுக்கவில்லை.

Next Story