மே.வங்காளத்தில் மாவோயிஸ்டுகள் இருவர் கைது: போலீசார் அதிரடி


மே.வங்காளத்தில் மாவோயிஸ்டுகள் இருவர் கைது: போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 20 Nov 2023 4:45 AM IST (Updated: 20 Nov 2023 5:35 AM IST)
t-max-icont-min-icon

கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து 6 தோட்டாக்கள், ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

ஒரு ரகசிய தகவலின் பேரில், கொல்கத்தா காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் சுடி பகுதியில் உள்ள அஹிரான் ஹாட்டில் தேடுதல் வேட்டை நடத்தியபோது அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 6 தோட்டாக்கள், சில ஆவணங்கள், ரூ.40,000 ரொக்கம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story