அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு


அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 24 Jun 2022 7:04 AM IST (Updated: 6 July 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தில் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.

ராணுவத்தில் 4 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற, 17 அரை வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், இன்று முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு விமானப்படை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும், ஜூலை 5ம் தேதி வரை அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு கால அவகாசம் உள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி முதல் 2005ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வரையிலான கால கட்டத்திற்குள் பிறந்தவர்கள் அக்னி வீரர்களாகும் தகுதி படைத்தவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

1 More update

Next Story