மணிப்பூரில் மீண்டும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம் - ராகுல்காந்தி


மணிப்பூரில் மீண்டும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 14 Jan 2024 6:48 PM IST (Updated: 14 Jan 2024 7:56 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடி இன்றுவரை வரவில்லை என ராகுல்காந்தி கூறினார்.

இம்பால்,

மணிப்பூரில் 2-ம் கட்டமாக இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல்காந்தி தொடங்கி உள்ளார். மணிப்பூரின் தவுபாலில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை பயணத்தின் தொடக்க விழாவில் ராகுல்காந்தி பேசியதாவது:-

லட்சக்கணக்கான மக்கள் இங்கே இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்கவும் அவர்களுக்கு ஆறுதல் கூறவும், இன்றுவரை பிரதமர் மோடி வரவில்லை. பிரதமர், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மணிப்பூரை இந்தியாவின் ஒருபகுதியாக கருதவில்லை என நினைக்கிறேன்.

மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் புரித்துள்ளோம். உங்களது சோகமும், வலிகளும் எங்களுக்கு புரியும். மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம். வேலைவாய்ப்பின்மை,விலைவாசி உயர்வால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர் என்றார்.

1 More update

Next Story