அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!


அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!
x

Image Courtesy: PTI 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முதல் கட்ட பணிக்கு ரூ. 1,450 கோடி செலவானது.

ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில், விமான நிலைய முனைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முனையத்தின் முகப்பு கட்டிடம் அயோத்தியின் ராமர் கோவில் கட்டிடக்கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்தைக் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில், அயோத்தி விமான நிலையத்திற்கு 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தியாதம்' என பெயரிடும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story