கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை கடுமையாக அதிகரித்தது. இதனால் உள்நாட்டு சந்தையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமைக்கான தேவை அதிகரித்ததால், இந்தியாவின் கோதுமை மாவு ஏற்றுமதி 200 சதவீதம் அதிகரித்தது. மேலும் உள்நாட்டு சந்தையில் கோதுமை மாவு விலையும் கணிசமாக உயரத் தொடங்கியது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் நல்லிவடைந்த சமூகத்தினருக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story