கொரோனா பரவல் - மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்


கொரோனா பரவல் - மாநிலங்களுக்கு  மத்திய அரசு வலியுறுத்தல்
x

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிப்பது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலையில் மீண்டும் எழுச்சி ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே அடுத்த சில மாதங்களில் பண்டிகைகளும், புனித யாத்திரைகளும் அணிவகுக்கின்றன.

இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கிறபோது, தொற்று பரவலுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% பேரை தேர்வு செய்து ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story