மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேபாளத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்


மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேபாளத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்
x

நேபாளத்தின் வெளியுறவுத்துறை மந்திரி என்.பி.சவூத்துடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை நேபாள நாட்டிற்கு செல்ல உள்ளார். அங்கு அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளிடையே நீர் மின்சக்தி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின்போது நேபாளத்தின் வெளியுறவுத்துறை மந்திரி என்.பி.சவூத்துடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் முறைகள் குறித்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story