உ.பி: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு !


உ.பி: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு !
x

வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.

பிலிபிட்,

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் பிரீதம் ராம் (28) என்பவர் தனது மனைவி ஈஸ்வரி தேவி, மகள்கள் நந்தினி(5), ரூபி (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பிலிபிட்-பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். மேலும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story