மதவழிபாட்டு தலத்தில் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்ட நபர் - அதிர்ச்சி சம்பவம்
ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அவரின் அருகே தற்கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கிடந்துள்ளது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் மைஹர் மாவட்டத்தில் உள்ள மலையில் இந்து மத கடவுள் சாரதா மாதா வழிபாட்டு தலம் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வருவது வழக்கம்.
இந்நிலையில், இந்த கோவிலுக்கு நேற்று வந்த பக்தர் கோவில் வளாகத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தற்கொலை செய்துகொண்டார். தான் கொண்டுவந்த கத்தியால் அந்த நபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளார்.
கோவிலில் பணியுரியும் ஊழியர் கோவில் வளாகத்தை சுற்றிவந்தபோது ஒருநபர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை தொடங்கினர். இதில், தற்கொலை செய்துகொண்ட நபர் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த லாலாராம் (வயது 37) என்பது தெரிவியவந்துள்ளது. இதையடுத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.